காஞ்சி மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகள் இல்லாததால் பாமகவினர் சாலை மறியல்

காஞ்சிபுரம்: தமிழகத்தில் நடைபெற்ற முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சியின் 51வார்டுகளில் 50 வார்டுகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு கவுன்சிலர்கள் பதவியேற்று கொண்டனர். தொடர்ந்து, மாநகராட்சி மேயர் பதவி பெண் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, நாளை பெண் மேயர், துணை மேயரை தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் துணை மேயருக்கான வேட்புமனுவை பெற பாமகவினர் நேற்று காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் வந்தனர். அப்போது அங்கு தேர்தல் நடத்தும் அதிகாரி உள்பட யாரும் இல்லை. இதனால், ஆத்திரமடைந்த பாமகவினர் மாநகராட்சி அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சிவகாஞ்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசி, அங்கிருந்து கலைய செய்தனர்.

Related Stories: