×

வடக்குத்து ஊராட்சியில் பொதுமக்கள் 3,000 பேருக்கு அன்னதானம்

நெய்வேலி, மார்ச் 4:   தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நெய்வேலி அடுத்த வடக்குத்து ஊராட்சியில் 3,000 பேருக்கு அசைவ உணவு   வழங்கப்பட்டது.  வடக்குத்து ஊராட்சி துணைத்தலைவர் சடையப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் ஏழுமலை முன்னிலை வகித்தார். சபா ராஜேந்திரன் எம்எல்ஏ கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அசைவ உணவான சிக்கன் பிரியாணியை வழங்கினார்.  பண்ருட்டி ஒன்றியக்குழு தலைவர் சபா பாலமுருகன், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், தொமுச முன்னாள் தலைவர் சிவந்தான் செட்டி,  திமுக நிர்வாகிகள் சந்திரசேகர், விஜி ராமலிங்கம், மாவட்ட கவுன்சிலர் மனமகிழ்சுந்தரி கருணாநிதி, வடக்கு மேலூர் முன்னாள் கவுன்சிலர் ஏழுமலை. வடக்குத்து சிவா, கீழ் வடக்குத்து மருத்துவர் ராஜேஷ், திமுக நிர்வாகிகள் ராமநாதன், பழனிச்சாமி, வரதராஜன், மணிகண்ட ராஜா, தமிழரசன், ஆபிரகாம், வாஜீத், சங்கர், கோவிந்தன், சரவணன், தளபதி வாசு, தமிழரசன், துரைராஜ், விக்னேஷ், ராஜசேகர், பிச்சையா, சங்கர், ராஜேந்திரன், மணிகண்டன், பால்ராஜ், கோபால், சம்பத்குமார்,  ஏகாம்பரம், வடக்குக்கு வார்டு உறுப்பினர்கள் ராஜபூபதி, பீனா அருள், ஈஸ்வரி ரங்கராஜன், சாந்தி சந்திரகாசு, ராமர் மீனா  உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்கள் மற்றும் வட்டம் 21, 30 ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நகர பொறுப்பாளர் பக்கிரிசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜேஷ், நகர இளைஞரணி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Northern Panchkula ,
× RELATED வில்லியனூரில் முதியவரை ஏமாற்றி தாமரை...