×

சாயல்குடி, கமுதியில் 29 சுயேட்சைகள் பதவி ஏற்பு

சாயல்குடி, மார்ச் 3: சாயல்குடி மற்றும் கமுதி பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகள் உள்ளன. கமுதி பேரூராட்சியில் 10 சுயேட்சைகள், ஒரு பாஜக உறுப்பினர் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். கமுதியில் 2, 3, 6, 9 ஆகிய நான்கு வார்டுகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் சுயேட்சை வேட்பாளர்கள் 4 பேர் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற உறுப்பினருக்கு நேற்று பதவி ஏற்பு நிகழ்ச்சி கமுதி பேரூராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. செயல்அலுவலர் இளவரசி பதவி பிரமாணம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நடத்தி வைத்தார்.

சாயல்குடி பேரூராட்சியில் பிரதான அரசியல் கட்சியினர் போட்டியிடாததால் 15 வார்டுகளிலும் சுயேட்சைகள் வெற்றி பெற்றிருந்தனர். நேற்று செயல்அலுவலர் சேகர் பதவி பிரமாணம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நடத்தி வைத்தார்.

Tags : Sayalgudi, Kamuthi ,
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...