ஒட்டன்சத்திரம் அருகே கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

ஒட்டன்சத்திரம், மார்ச் 3: ஒட்டன்சத்திரம் அருகே ஆலனம்பட்டியில் எஸ்ஆர்எஸ் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி இறுதியாணடு மாணவிகள் சாருமதி, சௌமியா, திவ்யபாரதி, ரேஷ்மா, சந்தியாதேவி, ஜான்சி, லட்சுமிபிரியா ஆகியோர் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் தங்களது பணி அனுபவத்திற்காக சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடத்தினர். கால்நடை மருத்துவர் ரவிக்குமார் தலைமை வகித்தார். முகாமில் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் குறித்தும், அதை தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: