×

வதிலையில் மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்

வத்தலக்குண்டு, மார்ச் 3: வத்தலக்குண்டு அருகே விருவீடு ராஜாதானி கோட்டை சாலையில் உதவி மின்பொறியாளர் அலுவலகம் இயங்கி வந்தது. தற்போது அந்த அலுவலகத்தில் இடவசதி போதவில்லை என்பதாலும், மழைக்காலங்களில் அலுவலகத்துக்கு வர பொதுமக்கள் சிரமப்படுவதாலும், தொலைபேசி- இணையதள இணைப்புகள் சரிவர கிடைக்காததாலும் அந்த அலுவலகத்தை இடமாற்றம் செய்ய மின்வாரிய அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி இனி உதவி மின்பொறியாளர் அலுவலகம் விருவீடு சாந்திபுரம் பிரிவு அருகே உள்ள துணை மின்நிலையத்தில் இருக்கும் அலுவலகத்தில் செயல்படும் என மின்வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags : Vadilai ,
× RELATED வதிலை கணவாய்பட்டியில் மாவட்ட கூடை பந்தாட்ட போட்டி