×

திருத்தங்கல்லில் ஒரே வார்டில் ஐந்தாவது முறையாக திமுக வேட்பாளர் வெற்றி

சிவகாசி, மார்ச் 2: திருத்தங்கல்லில் ஒரே வார்டில் ஐந்தாவது முறையாக திமுக வேட்பாளர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு கட்சியினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். திருத்தங்கல் 12வது வார்டு செயலாளர் குருசாமி (57). இவர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக கட்சி உறுப்பினராக இருந்து வருகிறார். சிவகாசி மாநகராட்சி 12வது வார்டு மாமன்ற உறுப்பினர் தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதே வார்டில் கடந்த 1996, 2001, 2006, 2011 உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு 4 முறை தொடர்ந்து வெற்றி ெபற்றுள்ளார். 5வது முறையாக போட்டியிட்டு இந்த தேர்தலிலும் மாநகராட்சி உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து 5 வது முறையாக ெவற்றி பெற்ற இவருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு, நகர பொறுப்பாளர் உதயசூரியன் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags : DMK ,Tiruthangal ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி