×

கமுதியில் முதல்வர் பிறந்தநாள்

கமுதி, மார்ச் 2: கமுதியில், முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா நேற்று பேருந்துநிலையம் பகுதியில் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். நகர்மற்றும் வடக்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற இவ்விழாவில், கேக் வெட்டி கொண்டாடினர். இதில் நகர பொறுப்பாளர் பாலமுருகன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்செல்விபோஸ், துணைத் தலைவர் சித்ராதேவி அய்யனார், மத்திய ஒன்றிய பொறுப்பாளர் சண்முகநாதன், நகரத்தார் குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் முத்துவிஜயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்விபோஸ், தனது கண்களை தானம் செய்தார்.

இதேபோல் செங்கப்படை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு கிளைக் கழகம் சார்பாக நோட்டு,புத்தகம்,பேனா வழங்கப்பட்டது. கிளைச் செயலாளர் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.பெருநாழியில் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் மனோகரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

Tags : Chief Minister ,Kamuti ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...