×
Saravana Stores

மேலூர் அருகே பாரம்பரிய முறைப்படி மீன்பிடி திருவிழா வலையில் சிக்கியது கட்லா, ரோகு, கெழுத்தி

மேலூர், மார்ச் 2: மேலூர் அருகே பாரம்பரிய முறைப்படி மீன்களை பிடித்து இறைவனுக்கு படைத்து கிராம மக்கள் உண்டனர். மேலூர் அருகே சருகுவலையபட்டி அரியூர்பட்டியில் உள்ளது மோகினிசாத்தான் கண்மாய். இக்கண்மாய் மூலம் நடைபெறும் விவசாயம் முடிந்து, நீர் வற்றிய நிலையில் நேற்று மீன்பிடி விழா நடைபெற்றது. கிராம முக்கியதஸ்ர்கள் வெள்ளை வீசியதை தொடர்ந்து, கண்மாய்கரையில் தயாராக நின்ற ஆயிரக்கணக்கான கிராம மக்கள் ஒரே நேரத்தில் கண்மாய்க்குள் இறங்கினர்.

தாங்கள் கொண்டு வந்த வலை, கச்சா, ஊத்தா உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு மீன்களை பிடிக்க ஆரம்பித்தனர். இதில் நாட்டுவகை மீன்களான கட்லா, ரோகு, கெழுத்தி, கெண்டை, குரவை போன்ற மீன்கள் சிறியது முதல் பெரியது வரை பிடிபட்டது. சாதி மத வேறுபாடின்றி அனைத்து மக்களும் இணைந்து ஒரே சேர கண்மாயில் மீன்களை பிடித்து, அவற்றை வீட்டிற்கு சென்று இறைவனுக்கு படைத்து உண்டனர். பிடித்த மீன்களை விற்பனை செய்ய கூடாது என்ற ஐதீகம் காரணமாக, நேற்று அவ்வூரில் உள்ள அனைத்து வீடுகளிலும் மீன் குழம்பு வாசனை தூக்கியது. இப்படி பாரம்பரிய முறைப்படி மீன்களை பிடித்து இறைவனுக்கு படைத்தால், மழை பெய்து, விவசாயம் அடுத்த வருடம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாகும்.

Tags : Katla ,Roku ,Koluthi ,Melur ,
× RELATED கிருஷ்ணகிரியில் தடையை மீறி...