மீன் வளர்ப்புக்காக கண்மாய் தண்ணீரை திறப்பதாக வழக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவு

மதுரை, மார்ச் 2: மதுரை மாவட்டம், கூத்தியார்குண்டு மெயின்ரோட்டைச் சேர்ந்த பசும்பொன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

திருப்பரங்குன்றம் தாலூகா நிலையூர் கண்மாயை நம்பி சுற்று வட்டாரப்பகுதியில் விவசாயப் பணிகள் நடக்கிறது. இப்பகுதிகளின் நிலத்தடி நீர் ஆதாரமாகவும் உள்ளது. இந்த கண்மாயில் மீன்பிடி குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. மீன் பிடிப்பதற்காக சட்டவிரோதமாக தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால், விவசாயப் பணிகள் பாதிக்கின்றன. எனவே, மீன் குத்தகையை ரத்து செய்தும், தண்ணீரை சட்டவிரோதமாக திறக்க தடை விதித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், தண்ணீர் திறப்பதால் ஏற்படும் பாதிப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரர் தரப்பில் தனது கோரிக்கை குறித்து புதிதாக மனு அளிக்க வேண்டும். அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தார்.

Related Stories: