பூண்டி நகர திமுக சார்பில் கொடியேற்றி இனிப்பு வழங்கல்

திருப்பூர், மார்ச் 2 :  முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருமுருகன்பூண்டி நகர திமுக சார்பில் 50 இடங்களில் கட்சிக்கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. திருமுருகன் பூண்டிநகர செயலாளர் பாரதி தலைமை தாங்கினார். திருமுருகன்பூண்டி உள்பட தண்ணீர்பந்தல் காலனி, அம்மாபாளையம், ராக்கியாபாளையம், அணைப்புதூர் உள்பட50  இடங்களில் முன்னாள் நகரச் செயலாளர் குமார் கட்சிக்கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். இதில் நகர துணை செயலாளர் மூர்த்தி, கிளை செயலாளர் ராமசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 23 வதுவார்டு கவுன்சிலர் பூங்கோதை வரவேற்றார்.

அதேபோல் பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக கவுன்சிலர்கள் 7வது வார்டு முருகசாமி, 8 வது வார்டு ராஜன், 9 வது வார்டு இன்ஜினியர் யுவராஜ், 12 வது வார்டு சுஜினி,  13வது வார்டு மதிவாணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் 1 வது வார்டு மகேஸ்வரி, 15 வது வார்டு கதிர்வேல், 19 வது வார்டு கோகிலா, 20 வது வார்டு ராஜேஸ்வரி, 24 வது வார்டு லீலாவதி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நகர செயலாளரும் 10-ஆவது வார்டு கவுன்சிலருமான சுப்பிரமணி, 14-வார்டு தேவராஜ்,  22 வது வார்டு பார்வதி உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: