×

குன்னூர், கூடலூர், பந்தலூர் திமுக சார்பில் ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம்

குன்னூர், மார்ச் 2: தமிழக முதல்வர் ஸ்டாலின் 69வது பிறந்த நாள் நிகழ்ச்சி குன்னூர் திமுக சார்பில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. நகர செயலாளர் ராமசாமி தலைமையில் மாவட்ட துணை செயலாளர் தமிழ்செல்வன் மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர் கான், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் தலைமை பேச்சாளர் முபாரக், பொது குழு உறுப்பினர்கள் சீலா கேத்ரீன் செல்வம், தலைமை கழக பேச்சாளர் ஜாகிர், அவைத்தலைவர் தாஸ், துணை செயலாளராகள் முருகேசன், சாந்தா சந்திரன், நகர பொருளாளர் ஜெகநாத் ராவ்  மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகர மன்ற உறுப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஓட்டுப்பட்டரை பகுதியில் திமுக சார்பில் அன்னதானம் வழக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கூடலூர்: கூடலூர் கிளை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக கொடி ஏற்றுதல், தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் வரலாற்று புத்தகம் வழங்குதல், 2022 ஆண்டிற்கான பாக்கெட் டைரி மற்றும் எல்பிஎப் பேக் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், எல்பிஎஃப் மண்டல பொதுச்செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில் கூடலூர் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதுதவிர, கூடலூர் நகர துணை செயலாளர் ஜபருல்லா தலைமையில் கூடலூர் வண்டிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மாணவர்களுடன் கேக் வெட்டி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. மாணவர்களுக்கு பேனா, பென்சில், நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது. இதில், இளைஞரணி அணி நிர்வாகிகள் சக்திவேல், பிரின்ஸ் இளங்கோ, ஆசாத், தங்கு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பந்தலூர்:  பந்தலூர் அருகே எருமாடு, பணஞ்சரா,வெட்டுவாடி உள்ளிட்ட பகுதிகளில் திமுக சார்பில் நடந்த ஸ்டாலின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் வார்டு செயலாளர் ஆட்டோ ராஜா தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் மாங்கோடு ராஜா கட்சி கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். சேரங்கோடு ஊராட்சி துணைத்தலைவர் சந்திரபோஸ், ஊராட்சி செயலாளர் ராஜா, மாவட்ட பிரதிநிதி கணபதி, கவுன்சிலர் முத்துசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பந்தலூர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நெல்லியாளம் நகர துணை செயலாளர் வக்கில் சிவசுப்பிரமணியம் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். பந்தலூர் அருகே கொளப்பள்ளி பகுதியில் ஒன்றிய செயலாளர் சிவானந்தராஜா தலைமையில் இனிப்பு வழங்கி பிறந்தநாள் விழாவை கொண்டாடினர். பிதர்காடு பகுதியில் ஒன்றிய செயலாளர் சுஜேஷ் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. நெல்லியாளம் டேன்டீ பகுதியில் சேரங்கோடு ஊராட்சி உறுப்பினர் கோபால் தலைமையில் தோட்ட தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தொழிலாளர்கள், திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பந்தலூர் பஜாரில் நகர செயலாளர் காசிலிங்கம் தலைமையில் கட்சி கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.

Tags : Coonoor ,Cuddalore ,Bandalur Stalin ,DMK ,
× RELATED குன்னூர் அருகே குடியிருப்பு...