மாவட்ட நிர்வாகம் தகவல் பாலக்காடு திப்பு சுல்தான் கோட்டைக்குள் பீரங்கி குண்டுகள் கண்டுபிடிப்பு

பாலக்காடு, மார்ச் 2: பாலக்காட்டில் நூற்றாண்டு பழமையான திப்புசுல்தான் கோட்டைக்குள் 47 பீரங்கி குண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பாலக்காடு திப்புசுல்தான் கோட்டை திருச்சூர் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோட்டையில், தற்போது சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இங்கு தொழிலாளர்கள் நேற்று பைப் லைனுக்கு குழி தோண்டும் போது 300 மீட்டர் ஆழத்தில் பீரங்கி குண்டு ஒன்று இருந்தது. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள், அந்த குழியை மீண்டும் தோண்டியபோது 47 பீரங்கி குண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதிகாரிகள் அவற்றை மீட்டு பாதுகாப்பான அறையில் வைத்துள்ளனர். மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தில் பொதுமக்கள் பார்வைக்கு கோட்டைக்குள் பீரங்கி குண்டுகள் வைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

Related Stories: