பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஊரக திறனறி தேர்வு

பேராவூரணி, மார்ச்1:பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஊரக திறனறி தேர்வு நடைபெற்றது. 9ம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் இத்தேர்வினை எழுதினர். ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் தேர்ச்சி பெறும் 50 மாணவர், 50 மாணவியருக்கு ஒரு வருடத்திற்கு, ரூ.1,000 வீதம் ஒன்பதாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 4 ஆண்டுகளுக்கு, கல்வி உதவித்தொகை தமிழக அரசால் வழங்கப்படும். பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த 275 மாணவர்களில் 11 பேர் தேர்வு எழுத வரவில்லை. மாணவர்கள் 89 பேரும், மாணவிகள் 175 பேரும் தேர்வு எழுதினர். மாவட்ட கல்வி அலுவலர் திராவிட செல்வம் தேர்வினை ஆய்வு செய்தார்.

Related Stories: