மன்னார்குடியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு உணவு தயாரிக்கும் போட்டி

மன்னார்குடி, மார்ச் 1: திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், மகளிர் திட்ட இயக்குனர் லேகா ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள் பங்கேற்ற வட்டார அளவிலான ஊட்டச்சத்து விழிப்புணர்வு உணவுத் தயாரிக்கும் போட்டிகள் மன்னார்குடியில் வட்டார மேலாளர் மாலா தலைமையில் நேற்று நடந்தது. முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் மேலவாசல் தனராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர் பாரதிமோகன், விவசாய அணி அமைப்பாளர் கோவிஅன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு வளர்இளம் பெண்கள், கர்ப்பிணிகள் ஆரோக்கியம் காக்கும் வகையில் ஊட்டச்சத்து உணவுகள் தயாரிக்கும் போட்டியை துவக்கி வைத்து வெற்றி பெற்ற மகளிருக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். உதவி திட்ட அலுவலர் சண்முகவடிவு, ஐசிடிஎஸ் உதவி திட்ட அலுவலர் ஜெனிபர், தலைமையாசிரியை வசந்தி ஆகியோர் நடுவர்களாக இருந்து 51 ஊராட்சிகளில் இருந்து பங்கேற்ற சுயஉதவிக்குழு பெண்கள் தயாரித்த 50க்கும் மேற்பட்ட உணவு வகைகளை பார்வையிட்டு அதில் சிறந்தவைகளை தேர்வு செய்தனர்.

Related Stories: