×

கலெக்டரின் சட்டப்பிரிவு நேர்முக உதவியாளர் காலியிடத்தை நிரப்ப கோரிய மனு தள்ளுபடி

மதுரை, மார்ச் 1:கலெக்டரின் சட்டப்பிரிவு நேர்முக உதவியாளர் காலியிடத்தை நிரப்பக் கோரிய மனு தள்ளுபடியானது. புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவிலைச் சேர்ந்த ரமேஷ், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: குரூப்-1 தகுதி நிலையிலுள்ள துணை கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும். கடந்த 2012ல் துணை கலெக்டர் தகுதியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சட்டம்) என்ற பணியிடம் உருவாக்கப்பட்டது. இந்தப் பணியிடமும் டிஎன்பிஎஸ்சி மூலமும் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சட்டம் படித்தவர்களைத் தான் இந்த பணியிடத்திற்கு நியமிக்க முடியும். பல்வேறு கலெக்டர் அலுவலகங்களில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இதனால் ஏராளமான வழக்குகள் தீர்க்கப்படாமல் தேங்கியுள்ளன. எனவே, கலெக்டர் அலுவலகங்களில் காலியாகவுள்ள அனைத்து நேர்முக உதவியாளர்(சட்டம்) பணியிடத்தை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர், மனுதாரரின் கோரிக்கை சிறப்பானதாக இருந்தாலும், பொதுநல வழக்காக கருத முடியாது எனக் கூறி தள்ளுபடி செய்தனர்.

Tags : Collector ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...