இல்லம் தேடி கல்வி கண்காட்சி

சிங்கம்புணரி, மார்ச் 1: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் சார்பாக சிங்கம்புணரி வட்டார பள்ளிகளுக்கு உட்பட்ட குடியிருப்புகளில் பணியாற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கான கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் கண்காட்சி மற்றும் இரண்டாம் கட்ட பயிற்சி நடைபெற்றது. பயிற்சியினை பள்ளி தலைமையாசிரியர் முனியாண்டி, உதவி தலைமை ஆசிரியர் அன்பு ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஏற்பாடுகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர் சேவுகமூர்த்தி, இல்லம் தேடி கல்வி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் பாக்கிய குமார் செய்திருந்தனர். இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு கண்காட்சியை கண்டு ரசித்தனர்.

Related Stories: