×

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் குளத்தில் 40 ஆண்டுக்கு பிறகு தீர்த்தவாரி

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பிரமோற்சவ விழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. ஆனால், கோயில் குளத்தில் போதிய தண்ணீர் இல்லாததால் கடந்த 40 ஆண்டாக தீர்த்தவாரி இங்கு நடைபெறாமல், வெளியில் நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டிற்கான பிரமோற்சவ விழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 21ம் தேதி சேஷவாகனம், சிம்ம வாகனத்தில் புறப்பாடு நடந்தது. 22ம் தேதி கருட சேவை உற்சவம் நடந்தது. 23ம் தேதி சூரிய பிரபை, சந்திர பிரபை புறப்பாடு நடந்தது. 24ம் தேதி பல்லக்கு நாச்சியார் கோலத்தில், சுவாமி புறப்பாடு நடந்தது.
முக்கிய நிகழ்வான தேரோட்டம் கடந்த 26ம் தேதி நடந்தது. அன்றிரவு இரவு 9 மணிக்கு தோட்டத் திருமஞ்சனம் நடந்தது. 27ம் தேதி காலை 6.30 மணிக்கு பல்லக்கில் வெண்ணை தாழி கண்ணன் திருக்கோலத்திலும், இரவில் குதிரை வாகனத்திலும் சுவாமி திருவீதியுலா நடந்தது.

9ம் நாளான நேற்று காலை 6 மணியளவில் ஆளும் பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து பகல் 11 மணியளவில் கோயிலின் குளத்தின் எதிரில் உள்ள ஆண்டாள் நீராட்டு மண்டபத்தில் திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து, சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடைபெற இருந்தது. கடந்தாண்டு பெய்த கனமழை காரணமாக தற்போது, பார்த்தசாரதி கோயில் குளத்தில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் 40 ஆண்டுகளுக்கு பிறகு இங்கு தீர்த்தவாரி நடைபெற்றது. இது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிகழ்வில் துணை ஆணையர் கவெனிதா உட்பட கோயில் பணியாளர்கள் பங்கேற்றனர்.

Tags : Tirthwari ,Tiruvallikeni Parthasarathy ,
× RELATED திருவல்லிக்கேணி பார்த்தசாரதி...