×

ஆண்டிபட்டி கிராமப்புறங்களில் ரூ.3.70 கோடி மதிப்பில் சாலை புதுப்பிக்கும் பணி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு

ஆண்டிபட்டி, பிப். 26: ஆண்டிபட்டி சுற்றியுள்ள கிராமங்களுக்கு செல்லும் சாலையை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் தெப்பம்பட்டி பகுதியில் இருந்து வேலப்பர்கோவில் செல்லும் சாலை, ஏத்தக்கோவில் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே பாலத்தை அடுத்து உள்ள பகுதியில் இருந்து ஏத்தக்கோவில் கிராமம் வரை செல்லும் சாலை, கோவில்பட்டியில் இருந்து குரும்பப்பட்டி வரை செல்லும் சாலை, பாலக்கோம்பை பகுதியில் உள்ள சாலை மற்றும் திருமலாபுரம் சாலை உள்ளிட்ட 5 இடங்களில் சாலை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்தது. ஆண்டிபட்டி சுற்றியுள்ள பகுதியில் 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.3.70 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் சாலை புதுப்பிக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் ரமேஷ் தலைமையிலான அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் சாலைப்பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்றும், கிராம மக்களின் கோரிக்கைகளுக்கு எற்ப சாலைகள் தரமாக உள்ளதா என்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் உதவி கோட்டப் பொறியாளர் திருக்குமரன், உதவி பொறியாளர் முத்துராம் மற்றும் சாலை ஆய்வாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Andipatti ,
× RELATED பாஜவுடனான கூட்டணியால் எடப்பாடிக்கு அச்சம்: டிடிவி தினகரன் பேட்டி