×

திருப்புவனம் பூமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

திருப்புவனம், பிப்.26: திருப்புவனம் பூமாரியம்மன் கோயில் பத்து நாள் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.கொடியேற்றத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கொடி மரத்திற்கு அபிசேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் இரவு பத்து மணிக்கு கொடியேற்றம் நடந்தது. விரதமிருக்கும் பக்தர்கள் அம்மனுக்கு முன் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். கண்ணன் பட்டர், செந்தில் பட்டர், ராஜாபட்டர் பூஜைகளை நடத்தினர். சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ மற்றும் கிராம விழாக் குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags : Thirupuvanam Poomariyamman Temple ,Panguni Festival Flag ,
× RELATED தெப்பக்குளம் மாரியம்மன் கோயில்...