×

குருவாயூர் கிருஷ்ணர் கோவில் திருவிழா ஆறாட்டுடன் நிறைவு

பாலக்காடு,பிப்.26: கேரளாவில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் கடந்த பத்து நாட்களாக நடைபெற்ற திருவிழா ஆறாட்டு நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது.நேற்று முன்தினம் காலை காலை 5 பள்ளிஉணர்த்தல், அபிஷேகம், உஷபூஜை ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து காலை 8 மணிமுதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். காலை 11.30 க்கு பத்தீரடி நிவேத்யபூஜை ஆகியன நடந்தன. தொடர்ந்து மாலை 5 மணிக்கு கிழக்கு கோபுர நடையில் உற்சவர் எழுந்தருளினார். தொடர்ந்து உற்சவருக்கு தீபாராதணைகள் நடந்தது.

மாலை 6.30 க்கு உற்சவர் யானை மீது பஞ்சவாத்யத்துடன் ஆறாட்டுக்கடவிற்கு எழுந்தருளினார். தொடர்ந்து ருத்ரத்தீர்த்தவாரி குளத்தில் உற்சவர் நீராடி விஷேச பூஜைகள் நடைபெற்றது. நெல், அரிசி, அவில், மலர், நவதானியங்கள், சில்லரை காசுகள், சர்க்கரை ஆகிய நிறைபறைகள் வைத்து  பக்தர்கள் நிறைபறைகள் வைத்து காணிக்கை வழிப்பாடுகள் செலுத்தினர். ஏராளமான பக்தர்களும் தீர்த்தவாரியில் புனிதநீராடி சுவாமியை தரிசித்தனர். இதனையடுத்து உற்சவர் யானை மீது திருவீதியுலா வந்து கோவிலை அடைந்த பின்னர் இரவு நந்தினி என்ற யானையின் யானையோட்டம் 11 முறை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து விழா கொடியிறக்கம் நடந்தது.

Tags : Guruvayur Krishna Temple Festival ,
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...