×

ராமநாதபுரத்தில் மல்லர் கம்பம் பயிற்சி

ராமநாதபுரம், பிப்.25:  ராமநாதபுரம் நேரு யுவ கேந்திரா, மதுரை மண்டல கலை பண்பாட்டு மையம், மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம், பட்டணம்காத்தான் முதல் நிலை ஊராட்சி சார்பில், மல்லர் கம்பம் இலவச பயிற்சி முகாம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் மருது பாண்டியன் தலைமையில் பட்டணம்காத்தான் ஊராட்சி தலைவர சித்ராமருது தொடங்கி வைத்தார்.

பிப்.28 வரை தினமும் காலை 6.30 மணி முதல் 8, மாலை 4.30 முதல் 6 மணி வரை டி-பிளாக் அம்மா பூங்கா அருகே நடைபெறும் இச்சிறப்பு முகாமில் தேசிய பயிற்றுநர்கள் செல்வமொழியன், ஆகாஷ், தேசிய வீரர் நவீன்குமார் ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்ட மல்லர் கம்பம் கழக தலைவர் சுப்ரமணியன், செயலாளர் லோக சுப்ரமணியன், பொருளாளர்  சரவணன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

Tags : Mallar ,Ramanathapuram ,
× RELATED ராமநாதபுரத்தில் கலவரம் தடுப்பு குறித்து ‘மாப் ஆபரேஷன்’