×

ஆத்தூரில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் கலெக்டருக்கு விவசாயிகள் கோரிக்கை

சின்னாளபட்டி, பிப். 25: ஆத்தூரில் உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, ஆத்தூர் மற்றும் பழநி ஆகிய வட்டங்களில் உள்ள விளாம்பட்டி, மட்டப்பாறை, ராமநாயக்கன்பட்டி, சித்தரேவு, சித்தையன்கோட்டை மற்றும் பாலசமுத்திரம் ஆகிய 6 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்வது வழக்கம்.

இவ்வருடம் நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால், ஆத்தூர் மற்றும் சித்தையன்கோட்டை விவசாயிகள் ஆத்தூர் கருவூலம் அருகே உள்ள திறந்தவெளி காட்டில் நெல்களை குவித்து வைத்து பிளாஸ்டிக் பாய், தார்ப்பாய் போட்டு மூடி பாதுகாத்து வருகின்றனர். கடந்த ஒரு வார காலமாக நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என விவசாயிகள் காத்திருந்தனர். ஆனால், அதிகாரிகளிடம் இருந்து எந்த பதிலும் வராததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து நெல் விவசாயிகள் கூறுகையில், `` தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் சீரிய ஏற்பாட்டால் ஆத்தூர் மற்றும் சித்தரேவு பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. இவ்வருடம் ஆத்தூரில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால், அறுவடை செய்த நெல்லை பாதுகாக்க இடமில்லாமல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து நெல்லை கொட்டி தார்ப்பாய் போட்டு மூடிவைத்து பாதுகாத்து வருகிறோம். விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக ஆத்தூரில் நெல்கொள்முதல் நிலையங்களை கலெக்டர் திறக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Attur ,
× RELATED பரனூர், ஆத்தூர் உட்பட 29...