கவுன்சிலர்களுக்கான மைக், இருக்கைகள் ஆகியவையும் தயார்படுத்தப்பட்டு வருகின்றது. சிறுபான்மையினர் கடன் பெற விண்ணப்பிக்கலாம்

ஈரோடு,பிப்.25: 3சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம்  மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

எனவே ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் கிறித்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களான சாதிச்சான்று, ஆதார் அட்டை, வருமானச்சான்று, ரேஷன் கார்டு, இருப்பிட சான்று கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும்.

இத்திட்டத்தில் பயன்பெற  மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: