×

கண்ணன்டஹள்ளியில் எருது விடும் விழா கோலாகலம்

போச்சம்பள்ளி, பிப்.25: போச்சம்பள்ளி அருகே கண்ணன்டஹள்ளியில் நடைபெற்ற எருது விடும் விழாவில் 300க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன. போச்சம்பள்ளி அருகே உள்ள கண்ணன்டஹள்ளியில் எருது விடும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊர் தலைவர் சென்னையன் தலைமை தாங்கினார். டாக்டர் செல்லகுமார் எம்.பி., எம்எல்ஏக்கள் பர்கூர் மதியழகன், தமிழ்செல்வன் ஆகியோர் எருது விடும் விழாவை துவக்கி வைத்தனர். போட்டியில் கிருஷ்ணகிரி, வாணியம்பாடி, ஆலங்காயம், திருப்பத்தூர், வேலூர், குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. வாடி வாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக திறந்து விட்டப்பட்டது. குறிப்பிட்ட தூரமான 125 மீ., தூரத்தை குறைந்த நேரத்தில் ஓடி கடந்த காளைகள் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக ₹1 லட்சம், இரண்டாம் பரிசாக ₹70 ஆயிரம், மூன்றாம் பரிசாக ₹50 ஆயிரம் மற்றும் பல சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

எருது விடும் விழாவை காண பல்வேறு மாவட்டங்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் மாவட்ட திமுக துணை செயலாளர் தட்ரஅள்ளி நாகராஜ், மத்தூர் ஒன்றியக்குழு தலைவர் விஜயலட்சுமி பெருமாள், ஒன்றிய செயலாளர் வசந்தரசு, மாவட்ட கவுன்சிலர் சிவம்பட்டி சங்கர், வழக்கறிஞர் புகழேந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊத்தங்கரை டிஎஸ்பி அலெக்சாண்டர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கினார். மத்தூர் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Bullfighting festival ,Kannadahalli ,
× RELATED பி.திப்பனப்பள்ளி, ஏ.கொத்தப்பள்ளியில் எருது விடும் விழா கோலாகலம்