×

கரூர் மாவட்டம் நெரூர் அருகே கோரை அறுவடை மும்முரம்

கரூர், பிப்.25: கரூர் மாவட்டம் நெரூர் அருகே கோரை அறுவடையில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்டம் நெரூர், சோமூர், ரெங்கநாதன்பேட்டை, புதுப்பாளையம் போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கோரை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் கோரை அனைத்தும் வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு பாய் உற்பத்தி மற்றும் கான்கீரிட் அமைக்கும் வகையில் அனுப்பப்பட்டு வருகிறது. கோரையின் தேவை அதிகளவு உள்ள காரணத்தினால் நூற்றுக்கணக்கான விவசாய குடும்பத்தினர் ஆண்டுதோறும் இதனை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த பகுதி மக்களின் பிரதான விவசாயமாக இந்த கோரை உற்பத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே, கோரை பயிருக்கு நியாயமான விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையிலும், விவசாயிகள் ஆர்வத்துடன் இதனை பயிரிட்டு வருகின்றனர். கரூர் மாவட்டம் நெரூர் அருகே தற்போது கோரை சாகுபடி நடைபெற்று வருகிறது. எனவே, கோரை சாகுபடி செய்யும் விவசாயிகளின் நிலையை உணர்ந்து அரசு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags : Korai harvest ,Nerur ,Karur district ,
× RELATED எச்சில் இலையில் அங்கப் பிரதட்சணம்...