×

அனைத்து வார்டுகளிலும் திமுக வென்றது எதிர்க்கட்சி இல்லாத சின்னாளபட்டி பேரூராட்சி அதிமுக, பாஜக, பாமக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்

சின்னாளபட்டி, பிப்.24: சின்னாளபட்டியில் முதல் முறையாக எதிர்க்கட்சி வார்டு உறுப்பினர்கள் இல்லாமல் ஹாட்ரிக் வெற்றியை திமுக பெற்றுள்ளது. திமுக போட்டியிட்ட 17 வார்டுகளிலும் அமோக வெற்றிபெற்றது. சின்னாளபட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 4வது வார்டை தவிர அனைத்து வார்டுகளிலும் திமுக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 1வது வார்டில் திமுக வேட்பாளர் வேல்விழி, 2வது வார்டு சங்கரேஸ்வரி, 3வது வார்டு ஆனந்தி, 5வது வார்டு பிரதீபா, 6வது வார்டு செல்வகுமாரி, 7வது வார்டு ஹேமா, 8வது வார்டு ராஜசேகர், 9வது வார்டு சுப்பிரமணி, 10வது வார்டு அமுல்ராஜ், 11வது வார்டு லெட்சுமி, 12வது வார்டு காமாட்சி, 13வது வார்டு சாந்தி, 14வது வார்டு ராஜாத்தி, 15வது வார்டு ராசு, 16வது வார்டு செல்வி, 17வது வார்டு ரவிக்குமார், 18வது வார்டு தாமரைச்செல்வி ஆகியோர் திமுக சார்பாக போட்டியிட்டு மாபெரும் வெற்றிபெற்றனர். 4, 16, 17, 18 ஆகிய நான்கு வார்டுகளில் போட்டியிட்ட அதிமுக டெபாசிட் தொகையை இழந்தது.

இதுபோல பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்ட அனைத்து வார்டுகளிலும் டெபாசிட் தொகையை இழந்தனர். இதில் ஒருசில வார்டுகளில் பாமக, பாஜக கட்சி வேட்பாளர்களை விட சுயேச்சை வேட்பாளர்கள் அதிக வாக்குகளை பெற்றனர். குறிப்பாக வார்டு 6ல் பாஜக வேட்பாளர் திருநாவுக்கரசை விட சுயேச்சையாக போட்டியிட்ட நாகபாண்டி 107 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார். இது போல வார்டு 9ல் பாமக சார்பாக போட்டியிட்ட பெரியசாமி மூன்று வாக்குகள் மட்டும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடதக்கது. 4வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்ற ஜெயக்கிருஷ்ணன், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை நேரில் சந்தித்து திமுகவில் இணைத்துக்கொண்டார்.

Tags : DMK ,AIADMK ,BJP ,Chinnalapatti ,
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...