×

காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே ஐஸ் கம்பெனியில் அமோனியா வாயு கசிவு: கண் எரிச்சலால் மக்கள் அவதி

தண்டையார்பேட்டை: காசிமேடு ஐஸ் கம்பெனியில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு கண் எரிச்சலால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே ஐஸ் கம்பெனி உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன். ஐஸ் கம்பெனியில் 10க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை திடீரென ஐஸ் கம்பெனியில் இருந்து அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு அந்த பகுதி முழுவதும் பரவியது. இதில் ஒரு சிலருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், ஐஸ் கம்பெனி ஊழியர்கள் உதவியுடன் அமோனியா வாயு கசிவை தடுத்து நிறுத்தினர். தகவல் கிடைத்த சிறிது நேரத்தில் போலீசார் வந்து வாயு கசிவை நிறுத்தியதால் கண் எரிச்சல் பாதிப்பில் இருந்து மக்கள் தப்பினர். ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த ஐஸ் கம்பெனியில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து வாயு கசிவை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால் காசிமேடு பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Tags : Kasimeddu fishing harbor ,
× RELATED காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில்...