×

மணலி, திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது

திருவொற்றியூர்: மணலி மண்டலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 15வது வார்டில் நந்தினி (திமுக), 16வது வார்டில் ராஜேந்திரன்(திமுக), 19வது வார்டில் காசிநாதன்(திமுக), 20வது வார்டில் ஏ.வி.ஆறுமுகம்(திமுக), 22வது வார்டில் தீர்த்தி(காங்கிரஸ்) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். மேலும், 17வது வார்டில் ஜெய்சங்கர்(அதிமுக), 18வது வார்டில் ஸ்ரீதர்(அதிமுக), 21வது வார்டில் ராஜசேகர்(அதிமுக) ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர். மொத்தமுள்ள 8 வார்டுகளில் திமுக 4 வார்டுகளிலும், காங்கிரஸ் 1 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளதால் மணலி மண்டல குழு தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது.

இதேபோல், திருவொற்றியூர் மண்டலத்தில் 1வது வார்டில் சிவகுமார் (திமுக), 3வது வார்டில் தமிழரசன் (எ) தம்பியா(திமுக), 5வது வார்டில் சொக்கலிங்கம், 8வது வார்டில் ராஜகுமாரி விஜயன்(திமுக), 9வது வார்டில் உமா சரவணன்(திமுக), 10வது வார்டில் தி.மு.தனியரசு(திமுக), 11வது வார்டில் சரண்யா கலைவாணன்(திமுக), 12வது வார்டில் கவி கணேசன்(திமுக), 13வது வார்டில் சுசீலா(திமுக), 14வது வார்டில் பானுமதி சந்தர்(திமுக) ஆகியோர் வெற்றி பெற்றனர். மேலும், 4வது வார்டில் ஜெயராமன்(கம்யூனிஸ்ட்), 6வது வார்டில் சாமுவேல் திரவியம்(காங்கிரஸ்) ஆகியோர் வெற்றி பெற்றனர். 2வது வார்டில் கோமதி சந்தோஷ்(சுயேச்சை), 7வது வார்டில் கார்த்திக்(அதிமுக) ஆகியோர் வெற்றி பெற்றனர். 14 வார்டுகளில் திமுக 10 வார்டு, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் தலா 1 வார்டிலும் வெற்றி பெற்று மொத்தமாக 12 வார்டுகளை கைப்பற்றி உள்ளதால் திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது.

Tags : DMK ,Manali ,Tiruvottiyur ,Zonal ,Committee ,
× RELATED மணலி சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்