ஆத்தூரில் சொத்து தகராறில் 2பேருக்கு வெட்டு

ஆறுமுகநேரி,பிப்.24: ஆத்தூர் அருகே உள்ள மேல சேர்ந்தபூமங்கலம் அம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் சின்னத்துரை மகன் டார்வின்(23). முக்காணி அம்பேத்கர் தெருவை சேர்ந்த ஆறுமுகநயினார் மகன் வெங்கடேசன். இருவரும் நேற்று முன்தினம் இரவு ஆத்தூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஓட்டல் முன்பு பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த டார்வினின் உறவினரான முனியசாமி என்பவரும் பேசிக்கொண்டிருந்தார். ஏற்கனவே முனியசாமிக்கும் டார்வினுக்கும் சொத்து தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் என் நிலத்திற்கு என்னிடமே பங்கு கேட்பாயா என தகாத வார்த்தை கூறி வாளால் டார்வினை வெட்டினார். தடுக்க வந்த டார்வின் நண்பர் வெங்கடேசனுக்கும் வெட்டு விழுந்தது. காயமடைந்த இருவரையும் அக்கம்பக்த்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து ஆத்தூர் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் விசாரணை நடத்தி முனியசாமியை கைது செய்தார்.

Related Stories: