×

துவார் ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம்

கந்தர்வகோட்டை, பிப்.24: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் துவார் ஊராட்சியில் பெத்தாரிப்பட்டி கிராமத்தில் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு உத்தரவையடுத்து தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. துவார் ஒன்றியக்குழு உறுப்பினர் திருப்பதி தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பலதா முன்னிலை வகித்தார். கால்நடைகளை காத்தலும் மற்றும் பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வு, மேலும் சிகிச்சையை வேலாடிபட்டி கால்நடை மருத்துவர் செந்தில்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் செய்திருந்தனர். இந்த சிறப்பு முகாமில் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி, கோழிக்கழிச்சல் தடுப்பூசி, ஆடு, மாடுகளுக்கு குடல் புழு நீக்குதல், சினைப் பரிசோதனை மற்றும் செயற்கை முறை கருவூட்டல் பணிகள் நடைபெற்றன. முகாமில் கால்நடைகளுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கால்நடை ஆய்வாளர் மார்ட்டில்ராஜ், கால்நடை உதவியாளர் ரெங்கசாமி, செயற்கை முறை கருவூட்டாளர் தவமணி மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முகாமில் 1360 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Tags : Veterinary Camp ,Twar Panch ,
× RELATED காணியம்பாக்கம் ஊராட்சியில் கால்நடை...