×

அங்கன்வாடியில் மீண்டும் பணி வழங்க கோரி ஒப்பந்த ஊழியர்கள் திடீர் உண்ணாவிரதம்

காரைக்கால், பிப்.24: காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் அங்கன்வாடி துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்யப்பட்ட ஊழியர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி திடீர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கடந்த வருடம் ஜூன் மாதம் 25 ஆம் தேதி 6 மாத ஒப்பந்தத்தில் மெரிட் அடிப்படையில் 272 பேர் அங்கன்வாடி துறையில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களாக பணியமர்த்தப்பட்டனர்.கொரோனா பேரிடர் காலங்களில் பல்வேறு பணிகளை செய்து வந்த அவர்கள் கடந்த மாதம் 5 ஆம் தேதியுடன் ஒப்பந்த காலம் முடிந்ததால் ஒப்பந்த பணி ரத்து செய்து உத்தரவிடப்பட்டது. அரசின் இந்த பணிநீக்க உத்தரவை எதிர்த்து புதுச்சேரி பூர்வீக ஆதிதிராவிடர் அரசு அலுவலர் கூட்டமைப்பின் சார்பில் காரைக்கால் மதக்கடியில் உள்ள சிங்காரவேலர் சிலை அருகே திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரத போராட்டத்திற்கு புதுச்சேரி பூர்வீக ஆதிதிராவிடர் அரசு அலுவலர் கூட்டமைப்பின் தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். அரசு ஊழியர் ஐக்கிய பேரவை தலைவர் செந்தமிழ் செல்வன் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் எஸ்.சி எஸ்.டி கூட்டமைப்பு பொதுச் செயலாளர் சந்திரசேகரன்,காமராஜ் மற்றும் 200 க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags : Anganwadi ,
× RELATED மதுராந்தகம் ஒன்றியத்தில் ரூ.36...