×

க.பரமத்தி அருகே குப்பம் பெரியகாண்டியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

க.பரமத்தி, பிப்.24: குப்பம் பெரியகாண்டியம்மன் கோயிலில் மஹா பூஜை சிறப்பு அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். க.பரமத்தி ஒன்றியம், குப்பம் கிராமத்தில் பெரியகாண்டியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் பெரியகாண்டியம்மன்,விநாயகர், குன்னுடையான், பொன்னர், சங்கர், தங்காயி ஏழு கன்னிமார் ஆகிய சுவாமிகளுக்கு தினமும் ஒரு கால பூஜைகளும் அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய விரத நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் தினசரி ஆராதனைகள் செய்யப் பட்டு பக்தர்களால் வழிபாடு செய்து வருகின்றனர். இக்கோயிலில் ஆண்டு தோறும் தமிழ் மாதத்தில் மாசி 10ம்தேதி மஹா பூஜை சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.
விழாவிற்காக நேற்று முன் தினம் காலை 7மணிக்கு பால்குடம், நீர் குடம், மஞ்சள் குடம் கொண்டு வரப்பட்டு, 18 வகை மூலிகை பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. பெரியகாண்டியம்மன், விநாயகர், குன்னுடையான், பொன்னர், சங்கர், தங்காயி ஏழு கன்னிமார், கருப்பண்ணார் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை நடந்தன. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags : Kuppam Periyakandiyamman Temple ,K. Paramathi ,
× RELATED க.பரமத்தி அருகே உடல் அழுகிய நிலையில் ஆண் சடலம்