வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் கண்காணிப்பாளர், உதவியாளர்களுக்கு பாளையில் சிறப்பு பயிற்சி முகாம் ஆணையாளர் விஷ்ணு சந்திரன் துவக்கிவைத்தார்

நெல்லை, பிப். 22: நெல்லை மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை  எண்ணும் பணியில் ஈடுபடும் கண்காணிப்பாளர்கள், உதவியாளர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாமை தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆணையாளருமான விஷ்ணு சந்திரன் பாளையில் துவக்கிவைத்தார்.  தமிழக நகர்ப்புற  உள்ளாட்சி தேர்தலில் நெல்லை  மாநகராட்சியில் பதிவான 55 வார்டுகளுக்கும் உரிய வாக்குகள் நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில்  இன்று காலை 8 மணி  முதல் எண்ணப்பட உள்ளன. இதற்காக தச்சநல்லூர் மற்றும் நெல்லை மண்டலங்களுக்கு  தலா 12 டேபிள்கள் போடப்பட்டுள்ளன. இதேபோல் பாளை மற்றும் மேலப்பாளையம்  மண்டலங்களுக்கு தலா 14 டேபிள்கள் போடப்பட்டுள்ளன. ஒவ்வொரு  வார்டாக வாக்குகள் எண்ண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 4 மண்டலங்களுக்கும்  தனித்தனியாக வாக்கு எண்ண ஏற்பாடு நடைபெறுவதால் ஒரு வார்டின் முடிவு  எண்ணத்ெதாடங்கிய அரைமணி நேரத்திற்கு தெரிய வாய்ப்புள்ளது.

வாக்கு  எண்ணும் பணியில் ஈடுபடும் கண்காணிப்பாளர்கள் 52 பேர் மற்றும்  உதவியாளர்கள் 52 பேருக்கான சிறப்பு பயிற்சி முகாம் பாளையில் நேற்று நடந்தது.  தலைமை வகித்த மாநகராட்சி  தேர்தல் அலுவலரும், ஆணையாளருமான விஷ்ணு சந்திரன் முகாமை துவக்கிவைத்தார்.  இதில் உதவி தேர்தல் அலுவலர்கள் 8 பேர் முன்னிலையில் சிறப்பு பயிற்சி  அளிக்கப்பட்டது. வாக்கு  எண்ணும் மையத்திற்கு வர வேண்டிய நேரம், வாக்கு எண்ணும் போது எதிர்கொள்ள  வேண்டிய சவால்கள் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டன. முகவர்கள்  முன்னிலையில் சீல் வைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து பின்னர் திறப்பது.  முகவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பது. தொழில்நுட்ப  பிரச்னை எழுந்தால் சரிசெய்வது எப்படி என்பது போன்ற விளக்கமும்  அளிக்கப்பட்டது. மேலும் வாக்கு எண்ணும் மையங்களில் தொழில்நுட்ப  வல்லுனர்கள் தயார் நிலையில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டது. மேலும்  மாதிரி மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை வைத்து விளக்க வகுப்பும்  நடத்தப்பட்டது. மேலும் பங்கேற்றவர்கள் சந்தேக வினாக்களுக்கும்  அதிகாரிகள் பதிலளித்தனர்.

Related Stories: