நாகலாபுரம் கல்லூரியில் தாய்மொழி தினம்

விளாத்திகுளம்,பிப்.22:  நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொருளாதாரத்துறை  சார்பில் உலக தாய்மொழி தினம் கொண்டாட்டம் நடந்தது. கல்லூரி முதல்வர்  சாந்தகுமாரி தலைமை வகித்தார். பொருளாதாரத்துறை தலைவர் சுரேஷ் பாண்டி  வரவேற்றார். தமிழ்த்துறை தலைவர் முனியசாமி விழாவைத் தொடங்கி வைத்து  பேசினார். தாய்மொழியில் பாடம் நடத்தும் பேராசிரியர்கள் விவேக லதா,  அசோக்குமார், வினோத்குமார், தங்க மாரியப்பன், சிந்து ஆகியோருக்கு நினைவு  பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து சோலைசாமி உலக தாய்மொழி தின உறுதிமொழி  வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். மோகன் சார்ஜ் நன்றி கூறினார்.

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அரசு  மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது. நெல்லை அரசு அருங்காட்சியகமும், சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும் இணைந்து உலகத் தாய்மொழி தினம் இணையத்தளம் வாயிலாக கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் சின்னத்தாய் தலைமை வகித்தார். தமிழ்துறைத்தலைவர் பூங்கொடி வரவேற்றார். நெல்லை அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் சத்தியவல்லி, தாய் மொழியின் பெருமைகள் குறித்தும், கவிஞர் மாலதி ராமலிங்கம் தாய்மொழியும் பெண்மையும்” என்ற தலைப்பிலும் உரையாற்றினர். தமிழ்த்துறைப்பேராசிரியர் உமா பாரதி நன்றி கூறினார். விழாவுக்கன ஏற்பாடுகளை கல்லூரியின் தமிழ்த்துறையினர் செய்திருந்தனர்.

Related Stories: