×

திருவாரூர் கமலாலய குளம் மதில் சுவர் கட்டுமான பணி மும்முரம்

திருவாரூர், பிப்.22: திருவாரூர் கமலாலய குளத்தின் மதில்சுவர் கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. திருவாரூரில் வரலாற்று சிறப்பு மிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜ சுவாமி கோயிலுக்கு சொந்தமான கமலாலய தெப்பக்குளத்தின் தெற்குப்புற மதில் சுவரில் 101 அடி நீளத்திற்கு கடந்த அக்டோபர் மாதம் 25ம் தேதி பெய்த மழையின் காரணமாக இடிந்து விழுந்தது. இதனையடுத்து மறுநாள் 26ம் தேதி இடிந்த பகுதியை பார்வையிட்ட அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மதில் சுவர் கட்டுமான பணிக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதனையடுத்து கடந்த டிசம்பர் 20ம் தேதி மீண்டும் 2வது முறையாக இடிந்த மதில் சுவரை பார்வையிட்ட அமைச்சர் சேகர்பாபு பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் இடிந்த 101 அடி நீளம் மதில் சுவர் மட்டுமின்றி அதனைத் தொடர்ந்து சேதமடைந்துள்ள மதில்சுவர் என மொத்தம் 148 அடி நீளத்திற்கு மதில்சுவர் ரூ.77 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ளது என்றும் விரைவில் பணி துவங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து இந்த மதில் சுவர் கட்டுமான பணிக்கு உரிய பூமி பூஜை நடைபெற்று பணிகள் துவங்கப்பட்ட நிலையில் தற்போது இதற்கான கட்டுமான பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Thiruvarur Kamalalaya ,
× RELATED திருவாரூர் கமலாலயகுளம் பகுதியில்...