×

கந்தர்வகோட்டை அரசு கால்நடை மருத்துவமனை முறையான செயல்பாட்டிற்கு வருமா?

கந்தர்வகோட்டை, பிப்.22: கந்தர்வக்கோட்டையில் அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கால்நடை மருந்துவமனையை ரூ.60 லட்சம் செலவில் கட்டப்பட்டு பொதுமக்கள் நலன் கருதி செயல்பட்டிற்கு கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில் கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாரி நோய், கழிச்சல் நோய் மற்றும் கால்நடைகளுக்கான செயற்கை கருவூட்டல், மேலும் கால்நடைகளுக்கு ஏற்படும் ஜுரம், கழித்தல் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு ஒரு தலைமை மருத்துவர், ஒரு மருத்துவ ஆய்வாளர், 3 உதவியாளர் பணியிடம் இருந்தும் ஒரு மருத்துவரும், ஒரு ஆய்வாளர் மட்டுமே பணிபுரிவதாக தெரிகிறது. இந்த மருத்துவமனையை சரியான நேரத்திற்கு திறந்து செயல்படாததால் கால்நடை வளர்ப்போர் மிகவும் சிரமப்படுகிறார்கள். விவசாய மக்கள் தங்கள் கால்நடைகளுக்கு தனியார் மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளித்தால் குறைந்தபட்சம் ஒரு கால்நடைக்கு ரூ.500 வரை செலவு செய்ய வேண்டியுள்ளதாக தெரிவிக்கிறார்கள். ஆகையால், விவசாய கால்நடை வளர்ப்போர் நலன் கருதி கந்தர்வகோட்டை கால்நடை மருத்துவமனையை போதிய பணியாட்களை நிரப்பி சரியான நேரத்தில் மருத்துவமனையை திறந்து கால்நடைகளுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என இப்பகுதி கால்நடை வளர்ப்போர் கேட்டுக்கொள்கிறார்கள்.

Tags : Kandarwakottai Government Veterinary Hospital ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு