கால்நடை மருத்துவ முகாம்

ராமநாதபுரம், பிப்.22:  திருப்புல்லாணி அருகே வள்ளிமாடன் வலசை கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. ராமநாதபுரம் கால்நடை உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில், பசுக்களுக்கு செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, தற்காலிக மலட்டுத்தன்மை நீக்கம், ஆண்மை நீக்க சிகிச்சை, குடற்புழு நீக்கம், தடுப்பூசி, சிறு அறுவை சிகிச்சை மற்றும் தாது உப்பு கலவை வழங்கும் பணி நடந்தது. கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இம்முகாமில் ஏராளமான மாடுகள், ஆடுகள் கோழிகள் பங்கேற்று பயன் பெற்றன. திடகாத்திரமான கிடாரி கன்றுகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Related Stories: