×

தேர்தல் முடிவுகள் அறிவித்த பின் கட்சியினர் பட்டாசு வெடிப்பதை தவிர்த்து அமைதி காக்க வேண்டும் அமைச்சர் முத்துசாமி வலியுறுத்தல்

ஈரோடு, பிப்.22: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவித்தபின், பட்டாசு வெடித்தல், ப்ளக்ஸ் பேனர் வைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்த்து கட்சியினர் அமைதி காக்க வேண்டும் என ஈரோடு தெற்கு திமுக மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சு.முத்துசாமி வலியுறுத்தி உள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிப்பின்போது எந்த சூழ்நிலையாக இருந்தாலும் திமுகவினர் அனைவரும் கட்டுப்பாட்டுடன் அமைதியாக இருக்க வேண்டும். வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் பட்டாசு வெடிப்பது, ஊர்வலமாகச் செல்வது, விளம்பர பேனர்கள் வைப்பது போன்ற எந்தவிதமான ஆடம்பரமான செயல்களிலும் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.குறிப்பாக, பட்டாசு வெடிப்பது, பேனர் வைப்பது போன்ற செயல்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என கட்சி தலைமை பல முறை அறிவித்துள்ளது. எனவே, எந்த சூழ்நிலையிலும் கட்டுப்பாட்டுடன் இருந்து அமைதி காக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

Tags : Minister ,Muthusamy ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...