ஊத்துக்கோட்டையில் தேர்தல் அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் தேர்தல் அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. ஊத்துக்கோட்டையில் தேர்தல் அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் மாலா தலைமையில்  நடைபெற்றது. இதில், ஒன்றிய மேற்பார்வையாளர் இளங்கோவன், உதவி தேர்தல் அலுவலர்கள் நடராஜன், வெங்கடேசலு, முனுசாமி, வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் துரை பாண்டியன், சுப்பிரமணி, வள்ளுவன், உதவியாளர்கள் மணிவண்ணன், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், தேர்தல் அதிகாரி மாலா கூறியதாவது: காலை 6 மணிக்கு வாக்கு எண்ணும் மையத்திற்கு வரவேண்டும். பின்னர், 7.45 மணிக்கு வேட்பாளர் வந்த பிறகு அவர்கள் முன்னிலையில் 8 மணிக்கு தபால் வாக்குகளை பிரிக்க வேண்டும். முதல் சுற்றில் 3 வார்டுக்கான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கப்படும். பிறகு ஒரு சுற்றுக்கு 3 வார்டுகள் வீதம் 5 சுற்றுக்களாக வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும். ஒரு சுற்றுக்கு 3 வார்டுகள் வெற்றி அறிவித்த பிறகுதான் அடுத்த சுற்று தொடங்க வேண்டும். வாக்கு எண்ணும் மையத்தில் செல்போன்களை யாரும் பயன் படுத்தகூடாது. வாக்கு எண்ணும்போது முகவர் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: