×

கவர்னருக்கு வரவேற்பு சூரிய பூங்கா, குப்பையில் மின் உற்பத்தி இலக்குமி இளஞ்செல்விக்கு ஆதரவாக பேராசிரியர் காமராஜ் பிரசாரம்

கோவை,பிப் 18:  கோவை மாநகராட்சி 52வது வார்டு திமுக வேட்பாளர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக்கை ஆதரித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக ஓய்வுபெற்ற பேராசிரியரும் தற்போதைய பன்னாட்டு புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி மைய இயக்குனருமான முனைவர் சௌ.காமராஜ் வாக்குசேகரித்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கோவை மாநகராட்சியில் ஏற்கனவே பல முன்னோடி திட்டங்களை இலக்குமிஇளஞ்செல்வியின் கணவரும் முன்னாள் எம்எல்ஏவுமான கார்த்திக் செயல்படுத்தியுள்ளார். ஏழைஎளியோர்கள், ஆதரவற்றோர், விதவைகள், இளைஞர்கள் மூலம் சுயஉதவிகுழு உருவாக்கி, வீடு தேடி வரும் கடன் திட்டத்தின் மூலமாக நிதியை ஏற்பாடு செய்து, தொழிற்பயிற்சி அளிதது சொந்த தொழில் தொடங்க ஊக்குவிக்கப்படுவார்கள். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க்கிட டிஜிட்டல் நூலகத்தை 52-ஆவதுவார்டு முழுவதுமாக ஆரம்பிக்கப்படும் கோவையை பகுதியில் விளையும் விளைபொருட்களுக்கு குளிர்சாதன சேமிப்பு கிடங்குகள் உருவாக்கி, விவசாயிகளுக்கு உ ரிய விலை கிடைக்க ஆவண செய்யப்படும். இதனால் மக்களுக்க ஆண்டு முழுவதம் காய்கறி, பழம் குறைந்த விலையில் கிடைக்க வழியேற்படும்.
 சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் மக்கும் குப்பை மற்றும் சாக்கடைகழிவுநீரை சுத்திகரித்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் மற்றும் வாகனங்களுக்கான எரிபொருள் உற்பத்தி செய்யும் திட்டத்தை செயல்படுத்த உள்ளளார்.வார்டு முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தி பாதுகாப்பு அதிகரிக்கப்படும். மாநகராட்சியில் சூரியபூங்கா அமைக்கப்பட்டு சுற்றுசூழலை பாதுகாக்க புதுப்பிக்கக் கூடிய எரிசக்திசாதனங்கள் அமைக்க மானிய வசதி ஏற்பாடு செய்து கொடுக்கப்படும். எனவே 52-வது வார்டில் போட்டியிடும் இலக்குமிஇளஞ்செல்விக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறசெய்யுங்கள். இவ்வாறு பேராசிரியர் சௌ. காமராஜ் கூறினார்.

Tags : Governor ,Prof. ,Kamaraj ,Ilankumvi ,
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...