×

பரிதா நவாப்பிற்கு வாக்கு சேகரிப்பு மதச்சார்பற்ற கூட்டணியை வெற்றி பெற செய்யுங்கள்

கிருஷ்ணகிரி, பிப்.18: கிருஷ்ணகிரி நகராட்சி 1வது வார்டில் திமுக சார்பில், நகர்மன்ற முன்னாள் தலைவரும், கிழக்கு மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளருமான பரிதா நவாப் போட்டியிடுகிறார். பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று, பரிதா நவாப்பை ஆதரித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ‘அனைத்து மதங்களையும் ஒருங்கிணைத்து செல்வதால் தான் திமுக கூட்டணி, மதச்சார்பற்ற கூட்டணி என்றழைக்கப்படுகிறது. அடிமைத்தனமான 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில், தமிழகம் பின்னோக்கி சென்றுள்ளது. தற்போது நடைபெற்று வரும் நல்லாட்சி, உள்ளாட்சியிலும் மலர வேண்டும். கிருஷ்ணகிரி நகராட்சில் அனைத்து நல்ல திட்டங்களும் கிடைக்க, திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும். மேலும், 1வது வார்டில் போட்டியிடும் உங்கள் சகோதரி பரிதா நவாப்பை, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்,’ என்றார். அவருடன் நகர செயலாளர் நவாப், மாவட்ட துணை செயலாளர் நாகராஜ், ராஜேந்திரன், டேம்.வெங்கடேசன், லியாகத், அத்தாவுல்லா, நிர்வாகிகள் ரஜினி, விஜய், இதாயத்துல்லா, லத்தீம், அமீர் சுஷேல், ஜெரீனா, லட்சுமி, ஜெயந்தி, கீதா, முனியம்மாள், ரமணி, தில்சாத் உள்ளிட்டோர் ஆதரவு திரட்டினர்.

Tags : Barida Nawab ,
× RELATED நகர்மன்ற தலைவராக பரிதா நவாப் பதவியேற்பு