×

விராலிமலை அருகே தீ விபத்தில் 4 டன் தேங்காய் நார் எரிந்து நாசம்

விராலிமலை. பிப்.18: விராலிமலை அருகே தனியார் தேங்காய் நார் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் காயமடைந்தார். சுமார் 4 டன் தேங்காய் நார் தீயில் எரிந்து நாசமாயின.விராலிமலை தாலுகா வடுகப்பட்டி ஊராட்சி தேத்தாம்பட்டியில் மருதமுத்து மகன் ரமேஷ் (எ) குமரேசன்(32) என்பவருக்கு சொந்தமான தேங்காய் நார் கம்பெனி உள்ளது. இங்கு 10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் கம்பெனியின் ஒரு பகுதியில் இருந்த தேங்காய் நார் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனைக் கண்ட பணியாளர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முற்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் கம்பெனி உரிமையாளரின் தாயார் மாரிக்கண்ணு(50) தீயை அணைக்க முயன்றபோது அவரது உடலில் தீப்பற்றி கொண்டதில் முகம் மற்றும் உடலில் தீக்காயம் ஏற்ப்பட்டது. அவரை சக பணியாளர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மாரிக்கண்ணுவை விராலிமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தீ விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் தீயணைப்பு துறையினர் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.


Tags : Viralimalai ,
× RELATED திறன் வளர்ப்பு பயிற்சி நடத்த வேண்டும்...