×

க.பரமத்தி ஒன்றியம் குப்பம் பெரியகாண்டியம்மன் கோயிலில் மாசி மாத சிறப்பு வழிபாடு

க.பரமத்தி, பிப்.18: க.பரமத்தி ஒன்றியம் குப்பம் கிராமத்தில் பெரியகாண்டியம்மன் கோயில் உள்ளது.இங்கு குடிகொண்டு உள்ள அம்மன் தமோ குணத்தில் பகவதியாகவும், ரஜோ குணத்தில் துர்கையாகவும், சத்துவ குணத்தால் அம்பாளாகவும், 64 கலை வடிவங்களாகவும் 84 லட்சுமி யோனி பேதங்களாகவும் 64 கலை உபசார பூஜைக்கு உரியவளாக உள்ள இந்த கோயிலில் விநாயகர், குன்னுடையான், பொன்னர், சங்கர், தங்காயி ஏழு கன்னிமார் ஆகிய சுவாமிகளுக்கு தினமும் ஒரு கால பூஜைகளும் அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய விரத நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் தினசரி ஆராதனைகள் செய்யப்பட்டு பக்தர்களால் வழிபாடு செய்து வருகின்றனர்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் 10ம் தேதியில் இருந்து மஹா பூஜை வரும் (22ம் தேதி) சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. இதில் அன்றையம் தினம் காலை 7 மணிக்கு பால், மஞ்சள், தேன், பன்னீர், திருமஞ்சன்பொடி, உள்ளிட்ட 18 வகை மூலிகை பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படுகிறது.எனவே உள்ளூர் வெளியூர் பக்தர்கள் தவறாமல் முக கவசம் அணிந்து கொண்டு பங்கேற்குமாறு கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Tags : K. ,Union ,Kuppam Periyakandiyamman Temple ,
× RELATED தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும்...