×

சகோதரர்கள் மீது போலீசார் வழக்கு காரைக்கால் அருகே திருப்பட்டினத்தில் மின்கசிவால் 3 வீடுகள் எரிந்து நாசம் ரூ.3 லட்சம் பொருட்கள் சேதம்: 6 ஆடுகள் பலி

காரைக்கால், பிப்.18: காரைக்கால் அருகே திருப்பட்டினத்தில் மின்கசிவால் அடுத்தடுத்து 3 வீடுகள் எரிந்து நாசமாயின. ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமாயின. மேலும் 6 ஆடுகள் தீயில் கருகி இறந்தன.காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் கீழையூர் எடத்தெருவை சேர்ந்தவர் வீரமணி(38). இவரது வீட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி அளவில் வீட்டில் ஏற்பட்ட திடீர் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வீ கூரை வீடு என்பதால் தீ மளமளவென பரவி கூரையில் பற்றிக்கொண்டது. தொடர்ந்து அருகில் இருந்த வீடுகளுக்கு தீ பரவியது. இதில் வீரமணி வீட்டின் அருகில் இருந்த ஸ்டாலின்(34) மற்றும் தமிழரசன்(27) ஆகியோர் வீடுகளிலும் தீ பரவியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். வீட்டின் வாசலில் 6 ஆடுகள் கட்டப்பட்டிருந்ததால் தீ விபத்தில் சிக்கி கருகி இறந்தன. இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மின் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் வீரமணி, ஸ்டாலின் மற்றும் தமிழரசன் ஆகியோரின் 3 வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின. வீட்டில் இருந்த மின்சாதன பொருட்கள், புத்தகங்கள், துணிகள், கூரைகள் என 3 மதிப்பிலான பொருட்கள் சேதமாயின. தகவலறிந்து வந்த நிரவி திருப்பட்டினம் தொகுதி எம்எல்ஏ., நாகதியாகராஜன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.எம்பி., வைத்திலிங்கம், போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திரபிரியங்கா, காரைக்கால் கலெக்டர் அர்ஜுன் சர்மா, துணை கலெக்டர் ஆதர்ஷ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

Tags : Minkashival ,Tiruppattinam ,Karaikal ,
× RELATED ரூ.3.90 கோடி செலவில் காரைக்கால் மீன்பிடி...