×

திமுக, காங். வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு திருவாரூர் நகராட்சி அதிமுக வேட்பளார்கள் வாக்கு சேகரிப்பு திருக்குறள் ஒப்பித்தல் போட்டி வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு

திருவாரூர், பிப்.18: திருவாரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் நடைபெற்ற திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் வெற்றிபெற்ற 2 மாணவிகளுக்கு பரிசுகளை கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் வழங்கினார்.திருவாரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் நடைபெற்ற திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் பரிசுகளை வழங்கி கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் கூறியதாவது: திருக்குறட்பாக்களை மாணவர்கள் இளம் வயதிலேயே மனப்பாடம் செய்தால் அவை பசுமரத்தாணிபோல் பதிந்து, நெஞ்சில் நிலைத்து அவர்கள வாழ்க்கைக்கு வழிகாட்டும், மாணவர்கள் தாம் பெறுகின்ற கல்வியறிவோடு, நல்லொழுக்கம் மிக்கவர்களாக வளர்வதற்கும் வழிவகுக்கும். எனவே,திருக்குறள் ஒப்பித்தல் செய்யும் மாணவச் செல்வங்களுக்கு பரிசு வழங்கிப் பாராட்டுவது, மாணவர்களின் நல்வாழ்வுக்குத் துணை நிற்பதாகவும், திருக்குறள் நெறி பரவ வழிவகுப்பதாகவும் அமையும் என்று கருதி, அரசு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியினை நடத்தி பரிசு மற்றும் பாராட்டினை வழங்கி வருகிறது.

அதனடிப்படையில், 2018-19, 2020-21ம் ஆண்டுகளில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவிகளான திருவாரூர் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவி சாருதர்ஷிணி என்பவருக்கும், திருத்துறைப்பூண்டி தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி மஞ்சுஷா என்பவருக்கும் பரிசுத்தொகையாக தலா ரூ.10 ஆயிரம் மற்றும் பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்களைபோல் பிற மாணவர்களும் போட்டிகளில் கலந்துகொண்டு இதுபோன்று பரிசு மற்றும் பாராட்டுகளை பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Pimuga, Kong ,Thiruvarur ,Thirukkulam ,
× RELATED 6,417 மாணவர்கள் புதிதாக சேர்க்கை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்