அலுவலர்களுக்கு டிஆர்ஓ அறிவுறுத்தல் அரியலூர் அருகே கிராமங்களில் வேளாண் வளர்ச்சி திட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

அரியலூர், பிப்.18: மகசூலை அதிகரிக்கும் பயிர் வளர்ச்சி ஊக்கிகள், ஆகிய தொழில் நுட்பங்களையும் தமிழ்நாடு நீடித்த நிலையான மானாவாரி இயக்கம், தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டம், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம், அட்மா திட்ட செயல்பாடுகள் ஆகிய அரசு திட்டங்களையும் காவடியாட்டம், தப்பாட்டம் மற்றும் நாதஸ்வர மெல்லிசை ஆகிய நாட்டுப்புற கலைகள் மூலம் விளக்கினர். நிகழ்ச்சியில் பூண்டி மற்றும் கோக்குடி கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். . அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் மீனாட்சி விவசாயிகளுக்கு நெல் தரிசில் உளுந்து சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கினார். உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் சுந்தரமூர்த்தி, வாசுகி, வேளாண்மை உதவி அலுவலர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை கிராம முன்னோடி விவசாயிகள் செய்திருந்தனர்.

Related Stories: