×

தென்காசி மாவட்டத்தில் பதற்றமான 146 பூத்களை இணையவழி கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு

தென்காசி, பிப்.18:  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தென்காசி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள், 17 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக நாளை (19ம் தேதி) வாக்குப்பதிவு நடக்கிறது. இத்தேர்தலை முன்னிட்டு வார்டு வாரியாக பிரதான மற்றும் துணை வாக்காளர் பட்டியல்களை https://tnsec.tn.nic.in என்ற இணையதளத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இவ்வசதியை பயன்படுத்தி வாக்காளர்கள் தங்கள் பெயர் மற்றும் வார்டு, எந்த வாக்குச்சாவடியில் உள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம். மேற்கண்ட இணையதளத்தில் ‘உங்கள் ஓட்டுச்சாவடியை அறிந்து கொள்ளுங்கள் என்ற பகுதியை பயன்படுத்தி, வாக்காளர் அடையாள எண்ணை உள்ளீடு செய்து, விவரங்களை அறிந்துகொள்ளலாம். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு கொரோனா நோய் தடுப்பு பாதுகாப்பு வழி முறைகளை பின்பற்ற ஏதுவாக உடல் வெப்பநிலை மானி கைகழுவும் திரவம் 100 மி.லி. மற்றும் 500 மி.லி. முகத்தடுப்பான், மூன்றடுக்கு முகக்ககவசங்கள், ஒரு முறை உபயோகப்படுத்தும் கையுறைகள், முழு கவச உடைகள் கொண்ட பெட்டகம் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வழியாக வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்ப தயார் நிலையில் உள்ளது. வாக்குப்பதிவுக்கு தேவையான சட்டமுறை சார்ந்த படிவங்கள், சட்ட முறை சாரா படிவங்கள், மிண்ணணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், மின்கலன்கள், அழியாத மை குப்பிகள், வாக்குப்பதிவு பொருட்கள், எழுது பொருட்கள் படிவங்களுக்கான உறைகள் போன்ற 80 வகையான பொருட்கள் வாக்குப் பதிவுக்காக தயார் நிலையில் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வசம் உள்ளது.

 இதனிடையே கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் நகராட்சிகளில் தேர்தலுக்கு தயார் நிலையில் உள்ள வாக்குச்சாவடி பொருட்களையும், வாக்கு எண்ணும் மையங்களை கலெக்டர் கோபால சுந்தரராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நுண்பார்வையாளர் நியமனம் தென்காசி மாவட்டத்தில் மேலும் 49 பூத்களில் கூடுதல் கண்காணிப்பிற்காக நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதனிடையே 603 வாக்குச்சாவடி மையங்களை வாக்குச்சாவடிகளிலும் 48 மண்டலங்களாக. பிரிக்கப்பட்டுள்ளது. குடிநீர், மின் விளக்கு, அனைத்து கழிப்பறை, மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான சாய்தள வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அந்தந்த மண்டல அலுவலர்கள் ஆய்வு செய்து, குறைபாடு உள்ள வாக்குச்சாவடி மையங்களை கண்டறிந்து சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்ட 20 பறக்கும் படையினர் தினமும்  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இம்மாவட்டத்தில் ஆவணங்கள் இன்றி  வாகனங்களில் கொண்

Tags : Tenkasi district ,
× RELATED திருவேங்கடம் அருகே நேற்றிரவு...