வேன் மோதி மத்திய அரசு ஊழியர் பலி

ஸ்பிக்நகர், பிப். 18: தூத்துக்குடி முத்தையாபுரம் கனநீர் ஆலை குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் புகாரி மகன் முகம்மது அப்பாஸ்(35). இவர், பழையகாயலில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான சிப்கோனியம் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவி தமிமா ரோஸ்லின் மற்றும் 2 மகன் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு அப்பாஸ் வேலைக்கு சென்றிருந்த நிலையில் அவரது குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர், நள்ளிரவில் பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். பொட்டல்காடு விலக்கில் சென்றபோது தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற வேன், பைக் மீது மோதியது. இதில் அப்பாஸ், தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனையில் முகம்மது அப்பாஸ் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: