×

(தி.மலை) பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீசார் கொடி அணிவகுப்பு வேட்டவலம் பேரூராட்சியில்

வேட்டவலம், பிப்.18: தமிழகத்தில் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி வேட்டவலம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கு 51 பேர் போட்டியிடுகின்றனர். மேலும் பொதுமக்கள் வாக்களிக்க 15 வாக்குப்பதிவு மையங்கள் ஏற் படுத்தப்பட்டுள்ளன. இதில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க காவல் துறை சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஹேமாமாலினி தலைமையில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க துப்பாக்கி ஏந்தி வேட்டவலம் பேரூராட்சிக்குட்பட்ட கடைவீதி, அரண்மனை தெரு, ராஜாஜி தெரு, தேரடி வீதி, சின்ன கடை வீதி, பாரதி தெரு, வழியாக பேண்டு வாத்தியங்கள் முழங்க சென்று போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர். இதில், எஸ்ஐ ராமச்சந்திரன் உட்பட 25க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர். அணிவகுப்பு நடத்தினர்.

Tags : T.Malai ,
× RELATED (தி.மலை) எருது விடும் விழாவில்...