×

செய்யாறு நகரில் அடிப்படை வசதிகள் நிறைவேற தேர்தல் பேக்கேஜ் 1) 27 வார்டுகளில் போட்டியிடும் ஆளும் கட்சி வேட்பாளர்களுக்கு உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் எம்எல்ஏ ஒ.ஜோதி பிரசாரம்

செய்யாறு, பிப்.18: செய்யாறு நகரில் அடிப்படை வசதிகள் நிறைவேற 27 வார்டுகளில் போட்டியிடும் ஆளும் கட்சியை சேர்ந்த வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என எம்எல்ஏ ஒ.ஜோதிபேசினார். செய்யாறு நகராட்சியில் திமுக வேட்பாளர்கள் 8வது வார்டு அம்பிகா விஜயகுமார், 6வது வார்டு ரா.மல்லிகா, 11வது வார்டு வழக்கறிஞர் கே.விஸ்வநாதன் ஆகியோரை ஆதரித்து அந்தந்த வார்டுகளில் வீடு வீடாகச் சென்று எம்எல்ஏ ஒ.ஜோதி வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற 9 மாதத்தில் புரிந்த சாதனைகளை விளக்கி கூறி சொன்ன வாக்குறுதிகளையும் சொல்லாத வாக்குறுதிகளை நிறைவேற்றிடும் முதல்வரின் கரத்தை வலுப்படுத்த உள்ளாட்சியில் நல்லாட்சி மலர செய்யாறு நகருக்கு தேவையான சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றிட மு.க.ஸ்டாலின் தலைமையிலான மக்களாட்சிக்கு 100 சதவீதம் திமுக வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

மேலும் அந்தந்த பகுதியில் உள்ள திமுக வேட்பாளர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு முன் வருவார்கள். கவுன்சிலர் குறிப்பிடும் அனைத்து அடிப்படைத் தேவைகளையும் உடனடியாக நிறைவேற்றித் தரப்படும்’ என்றார்.
அப்போது, மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் பார்வதிசீனிவாசன், மாவட்ட துணை செயலாளர் க.லோகநாதன், வார்டு தேர்தல் பொறுப்பாளர்கள் எம்.தினகரன், ராம் ரவி ஏ.ஞானவேல், வெங்கடேசன், திருநாவுக்கரசு, ஏழுமலை, செல்வம், ஒன்றிய செயலாளர்கள் ஆர்.வீ.பாஸ்கரன், திராவிட முருகன், எஸ்.வி.சுப்ரமணி, ரா.வே.சேட்டு, அய்யாதுரை, கோபு, ஆர்.கணேசன், சிட்டிபாபு, அருள், சக்திவேல், கலைச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Seyyar ,Udayasooriyan ,MLA ,O ,Jyoti ,
× RELATED உலக மலேரியா தின விழிப்புணர்வு...